அத்தனகலு ஓயாவில் 11.10.2024 அன்று காலை 9.45 மணிக்கு வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணி நேரத்திற்கும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரதேசவாசிகள் மற்றும் அப்பகுதிகளினூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் இவ்விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனர்த்த முகமைத்துவ பிரிவுகளின் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
