அனுபவம் அற்ற நபர்களிடம், நாட்டை ஒப்படைக்கக் கூடாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து!

0
82

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், அனுபவமற்ற புதிய நபர்களிடம் நாட்டை ஒப்படைக்க, மக்கள் நினைக்கக் கூடாது என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று, உடுகம்பல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில், இவ்வாறு குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கொண்டுவரப்பட்டதை நான் எதிர்த்தேன்.

அனுபவமில்லாதவர்களை நம்பி நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என்றேன்.

அதுபற்றி எங்கள் கட்சி கேட்கவில்லை.

ரணில் விக்ரமசிங்க, அனுபவமிக்க தலைவராக பொறுப்பேற்ற போது, நாங்கள் உதவி செய்தோம்.

ரணில் விக்ரமசிங்கவை கொண்டு வந்தது, எங்கள் கட்சியின் தலைவர்கள்தான், நாங்கள் அல்ல.

2022 மே மாத நாட்டின் நிலைமையைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
நாட்டின் இன்றைய நிலையைப் பாருங்கள்.

நமக்கு முன் பொருளாதாரத்தில் சரிந்த கிரீஸ் போன்ற நாடுகள், இன்றும் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன.

நாங்கள் குழுவாகச் செயற்பட்டதால், நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வர முடிந்தது.

ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தவுடனேயே, அரசியலை இரண்டாவதாக வைத்து, நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவோம் என்று அனைவரையும் அழைத்தார்.

யாரும் சேரவில்லை.

விமர்சனம் மட்டும் செய்தார்கள்.

ரணில் விக்ரமசிங்க ஒன்றிணைந்து செயற்பட்டு, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு விரும்பினார்.

சிலருக்கு அது பிடிக்கவில்லை.
அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.

அவர் தனி ஒருவராகவே இருந்தார்.எங்களிடம் பெரும்பான்மை உள்ளது.

அனுபவமுள்ள முதிர்ந்த தலைவர் என்பதாலேயே, எங்களின் ஆதரவை பெற்று, நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட்டார். என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.