அன்பு பணி அருட்சகோதரர் சபையின் ஆசிய நாட்டின் மேலாளர் மட்டக்களப்பிற்கு வருகை

0
206

இலங்கைக்கு வருகை தந்துள்ள அன்பு பணி அருட்சகோதரர் சபையின் ஆசிய நாட்டின் மேலாளர் அருட்சகோதரர் ஏறியன் எப்சி, இன்று மட்டக்களப்பு தீரனியம் பாடசாலைக்கு விஜயம் செய்தார்.


அன்பு பணி சபையின் இலங்கைக்கான மேலாளர் அருட்சகோதரர் கிறிஸ்துராஜா உடன் வருகை தந்த அருட் சகோதரரை தீரனியம் பாடசாலை தீரனியர்கள் மாலையிட்டு, தமிழ் பாரம்பரிய விழுமியங்களுடன் வரவேற்றனர்;.
இவர்கள் உடன் தீரனியம் பாடசாலை மேலாளர் அருட்சகோதரர் ஸ்டீபன் மத்தியூ, தீரனியம் பாடசாலை அதிபர் அருட்சகோதரர் வில்பிரட் மரியதாஸ் ஆகியோருக்கும்
வரவேற்பளிக்கப்பட்டது.

வன்னிகோப் அவுஸ்திரேலிய அமைப்பின் நிதி பங்களிப்பில் தீரனிய ‘சேதன பயிர்செய்கை பிரிவில்’ பழமர நடுகையும் இடம்பெற்றது.வன்னி கோப் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட இசைவழி சிகிச்சை பிரிவு, உடல் தொடுகை சிகிச்சை பிரிவு ,தீரனியம் வெளியீட்டுப்பிரிவு, பேச்சு மற்றும் மொழி சிகிச்சை பிரிவு என்பன இன்று திறந்து வைக்கப்பட்டன.


நிகழ்வில் பாடசாலை பிள்ளைகளின் கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.