முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் தங்க மோதிரங்களை திருடிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் ஒகஸ்ட் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது அணிந்திருந்த இரண்டு தங்க மோதிரங்களை திருடிய நபரும் மற்றுமொரு தங்க மோதிரத்தை திருடிய மற்றுமொருவரும் அடகு சீட்டு மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.