அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை பெரிதும் கலக்கமடையச் செய்துள்ளது.
அமெரிக்காவில் 2024-ல் மட்டும் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
சமீபத்தில் இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘ஒரு தேசமாக, துப்பாக்கி வன்முறையை நாம் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்’ என்று கூறினார்.