அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

0
105

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரில் பயணிகள் விமானமொன்று ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது. இதனை அமெரிக்காவின் போக்குவரத்து திணைக்களம் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.

இவ்விமானம் ரீகன் வொஷிங்டன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும்போது இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும்  நிறுத்தப்பட்டுள்ளதோடு, மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெற்றபோது விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்துள்ளதோடு, ஹெலிகொப்டரில் மூன்று அமெரிக்க இராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “இப்பாரிய விபத்து” குறித்து தனக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகால உதவியாளர்களின் பணிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.