அமெரிக்க திறைசேரி – இராஜாங்க திணைக்களங்களின் உயர்மட்ட தூதுக்குழு நாளை இலங்கை வருகை!

0
181

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழு, நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.
இந்த தூதுக்குழுவின் இலங்கை விஜயம், நாளை முதல் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை அமையவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
ஆசியாவிற்கான பிரதி உதவித் திறைசேரி செயலாளர் றொபர்ட் கப்ரொத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளரான தூதுவர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோர் இந்தத் தூதுக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.
அவர்கள் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.
இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி செய்வதற்கான மிகவும் செயற்திறன் வாய்ந்த வழிமுறைகள் தொடர்பில் தமது அனைத்து சந்திப்புகளிலும் அவர்கள் ஆராய்வார்கள் என அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.