அரசாங்கம் முன்மொழிந்த அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் புதிய வரைவு இன்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இன்றைய தினம் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்காக இந்த வரைவு அமைச்சரவையின் செயலாளருக்கு நீதி அமைச்சால் கடந்த வாரம் அனுப்பப்பட்டிருந்தது.
அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் 7 நாட்களில் 22ஆவது திருத்தச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்படும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட 22ஆவது சட்ட வரைவில் உள்ள விதிகள் புதிய வரைவில் நீக்கப்பட்டுள்ளன என நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வரைவு 19ஆவது திருத்தத்தை பிரதிபலிப்பதாகவும் அதற்கும் அப்பால் செல்லும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.