‘அமைதிக்காக, நீதிக்காக நடக்கின்றோம்’ எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பில், சுழற்சி முறையிலான நடைபயணம்

0
84

‘அமைதிக்காக, நீதிக்காக நடக்கின்றோம்’ எனும் தொனிப் பொருளில், மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான நடைபயணத்தின், 890வது நாளான இன்று, பலஸ்தீன்-இஸ்ரேல் போரை நிறுத்தக் கோரி வலியுறுத்தப்பட்டது.
பலஸ்தீன்-இஸ்ரேல் போர் ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் நிறைவு பெறும் நிலையில், இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக சுழற்சி முறையில் முன்னெடுத்து வரும் ஜனநாயகத்திற்கான நியாய தொடர் நடைப்பயணத்தின்
890வது நாளான இன்றைய தினம், மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இருந்து மட்டக்களப்பி காந்தி பூங்கா வரை முன்னெடுக்கப்பட்ட, நடைப்பயணத்தில்
பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தங்கியவாறு நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.


தமிழ்-முஸ்லிம் பெண்கள் நடைபயணத்தில் பங்கெடுத்தனர்;. அமைதி நடை பயணத்தில் சமூக செயற்பாட்டாளர்களான தட்சனாமூர்த்தி சாரதாதேவி, அனீஸா பிர்தௌஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.