அம்பாறை அக்கரைப்பற்றில், கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு

0
105

அம்பாறை அக்கரைப்பற்று பனங்காட்டுப் பகுதியில், பெரும்போக நெற்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்துமாறு
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நெற் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயற்பகுதிகளுக்குள் நுழையும் கட்டாக்காலி மாடுகள், நெற் பயிர்களை அழித்து நாசம் செய்வதாக, நெற் செய்கையாளர்கள்
கவலை வெளியிட்டுள்ளனர்.


இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர் மற்றும் விவசாய பெரும்பாக உத்தியோகத்தர் மற்றும் பொலிசாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சில விவசாயிகள், கட்டாக்காலி மாடுகளை பிடித்து வைத்துள்ளனர்.


மாடுகளை விடுவிக்க வேண்டுமெனில், கால்நடை வளர்ப்பாளர்கள், பயிர்ச் சேதங்களுக்குரிய, நஸ்டஈட்டை வழங்க வேண்டும் என விவசாயிகள்
வலியுறுத்தியுள்ளனர்.