அம்பாறை ஆசிரிய இடமாற்றத்தில் இழுபறி நீடிக்கிறது

0
100

அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான மேன் முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான
கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டுள்ளார்.
அண்மையில் வழங்கப்பட்ட அம்பாறை மாவட்ட கல்வி வலயங்களில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
பிரஸ்தாபிக்கப்பட்டது. மாவட்டத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், மாவட்டத்திற்கு வெளியே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களின் இடமாற்றங்களை
நிறுத்தி, மாவட்டத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவது என தீர்மானிக்கப்பட்டது.
ஆசிரிய இடமாற்றத்தில் உள்ள முரண்பாடுகளையும் கண்டறியும் முகமாக, இடமாற்றம் தொடர்பில் மேன் முறையீடுகளைச் சமர்ப்பிக்கும் காலம் இன்றோடு நிறைவடையும்
நிலையில், அது எதிர்வரும் 16ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.