அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள்
இன்று சிறப்பாக இடம்பெற்றன
பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ந.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் வி.பபாகரன் கலந்துகொண்டு,
மகளிர் தினம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார்.
விசேடஅதிதியாக உதவிப ;பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கலந்துகொண்டார்.
பெண்களில் முதலீடுசெய்க! முன்னேற்றத்தை விரைவுபடுத்துக எனும் 2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளுடன் வன்முறையற்ற சூழலும் மகிழ்ச்சியான குடும்பமும் எனும்
தலைப்பில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி குணாளினி சிவராஜ் நிகழ்வில் வளவாளராக கலந்துகொண்டு விழிப்பூட்டல் கருத்துக்களை
வழங்கினார்.
நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள்
என பலர் கலந்துகொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவின் மகளிர் தின நிகழ்வுகள் சிறப்பாக...