அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளராக, திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன்
நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த தங்கையா கஜேந்திரன், பிரதேச செயலக வளாகத்திலுள்ள
கணபதி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதில் பிரதேச செயலாளருக்கு, ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளர் வி.பபாகரன், உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர்
உள்ளிட்ட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
முன்னதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக கடமையாற்றிய வினாசித்தம்பி பபாகரன் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் வளவாளராக
பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் நேற்றுடன் கடமையினை பொறுப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளராக தங்கையா கஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.