பெரும்போக நெல் கொள்வனவுக்காக நடைமுறைப்படுத்தப்படும் ஈட்டுக்கடன் திட்டம் தொடர்பில் நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெற்களஞ்சிய உரிமையாளர்களுக்கு
தெளிவூட்டும் கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.
நெல்லை கொள்வனவு செய்ய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளினால் சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 50 மில்லியன்
ரூபாவும் மற்றும் நெற்களஞ்சிய உரிமையாளர்களுக்கு 25 மில்லியன் ரூபாவும் சித்திரை மாதம் 30ம் திகதி வரை கடன் வழங்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இக்கடன் தொகைக்கு 15 சதவீத ஆண்டு வண்டியில் 4 வீதம் வட்டி நிவாரணமாக திறைசேரியால் வழங்கப்படவுள்ளதுடன் 11 வீதத்தினை கடன் பெறுகின்றவர்களும் செலுத்த
வேண்டும் என்பதுடன் மீளச் செலுத்த 180 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் சுற்றிக்கையினை சுட்டிக்காட்டி விளக்கினார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் மற்றும் விவசாய அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள்; நெல் ஆலை உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை ஆலையடிவேம்பு பெரும்போக நெல் கொள்வனவுக்காக நடைமுறைப்படுத்தப்படும் ஈட்டுக்கடன் திட்டம் தொடர்பில் தெளிவூட்டும் கூட்டம்