அம்பாறை கல்முனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞனை எதிரே வந்த கார் மோதிய நிலையில், காரின் சாரதியான வைத்தியர், பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரின் சாரதி விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து தப்பித்துச் சென்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டிருந்தார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.