அம்பாறை பொத்துவில் விவசாய விரிவாக்கல் நிலையப் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் பிரதேசத்தில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாக விதைக்கப்பட்ட நெல் மற்றும் நிலக்கடலை
என்பன அறுவடை செய்யப்பட்டது.
அறுவடை நிகழ்வானது பொத்துவில் விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.நிர்மதன் மற்றும் விவசாய போதனாசிரியர் என்.என்.சித்தாரா ஆகியோரின் ஒழுங்மைப்பில்
இடம்பெற்றது.
பொத்துவில் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஊடாக கால நிலைக்கு சீரமைவான நீர்பாசன திட்டத்தின் ஊடாக பொத்துவில் றொட்டைப் பிரதேசத்தில் 10ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
அறுவடை நிகழ்வில், பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர், உதவி விவசாயப் பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் பொத்துவில் விவசாய விரிவாக்கல் நிலைய
உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.