அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் விபத்து சம்பவம்

0
82

அம்பாறை மருதமுனை பிரதான வீதியில், பயணித்த வாகனங்கள் சில நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை சீரற்ற வானிலை நிலவிய வேளை, மட்டக்களப்பில் இருந்து நிந்தவூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார், மருதமுனை பிரதான வீதியில் திரும்ப முயற்சித்த போது,
அவ்வீதியினால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, பேருந்து என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணித்தவர்கள் காயங்களுக்குள்ளாகினர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.