அம்பாறை மற்றும் மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு

0
88

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள
மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சமூக சேவை திணைக்களத்தால் வழங்கப்பட்ட உலர் உணவுப்பொதிகளே, இடைத்தங்கல் முகாமிலுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
டபிள்யு.டி.வீரசிங்கவின் இணைப்பாளர் வசந்த கலந்து கொண்டு உலர் உணவுப்பொதியை வழங்கி வைத்தார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய, தாமரைக்குளம் சீரடி சாயி கருணாலய ஸ்தாபகரால், திருக்கோவில் 4 கிராமத்தில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த 50 குடும்பளுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை மட்டக்களப்பு நொச்சிமுனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கு நலிவுற்றோர் அபிவிருத்திச் சங்கத்தால்
உலருணவுகள் வழங்கப்பட்டன.