அரசாங்க அதிபர் தலைமையில்
மட்டு.மாவட்ட விவசாய குழுக்கூட்டம்

0
420

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகத்திற்கான திகதியை தீர்மானிப்பதானால் தமக்கான உள்ளீடுகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள்,நீர்பாசன திணைக்களத்தின் மத்திய,மாகாண பணிப்பாளர்கள்,விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இம்முறை சிறுபோக செய்கையின்போது எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் சிறுபோக அறுவடையின்போது எதிர்நோக்கிய நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளின் முன்னெடுக்கப்படவுள்ள பெரும்போக செய்கை முன்னெடுப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. சிறுபோக செய்கையில் அறுவடைகள் நடைபெற்ற நிலையில் நெல்லை உரிய விலைக்கு சந்தைப்படுத்தமுடியாமை குறித்தும் நெற்சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட நெல்லுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை குறித்தும் இதன்போது விவசாயிகளினால் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டனவெளிநாடுகளிலிருந்து அரசி இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாகவும் தமது நெல்லுக்கான விலைகள் குறைவடைந்ததாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டிய விவசாயிகள்
பெரும்போக நெற்செய்கைக்கான எரிபொருட்கள்,விதை,யூரியா பசளை போன்ற உள்ளீடுகளை விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் திகதிக்கு வழங்குவதற்கு உறுதியளிக்கும்பட்சத்திலேயே தாங்கள் இம்முறை விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என குறிப்பிட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை விவசாய அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு உரிய உள்ளீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும் அதேவேளை எரிபொருள் தொடர்பான விபரங்கள் அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவையும் உhயி நேரத்தில் கிடைக்கும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துரையாடலின் போது உறுதியளித்தார்.