அருட்தந்தைக்கு விளக்கமறியல்!

0
146

ஜப்பானில் இருந்து பிராடோ ரக வாகனமொன்றை இறக்குமதிசெய்து தருவதாக தெரிவித்து, 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரான அருட்தந்தை நேற்று கோட்டை நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம், ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷியாமலி சமரநாயக்க என்ற பெண்ணுக்கு தமது சேவைபெறுநர் இந்தப் பணத்தை வழங்கியுள்ளதாகவும், அப்பெண பல கோடி ரூபா மோசடி செய்த வழங்கில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அருட்தந்தையின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். இந்த பெண்ணுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணத்தை முன்வைக்க முடியுமா என சந்தேகநபரான அருட்தந்தையிடம் நீதவான் வினவினார். எனினும், அவ்வாறான ஆவணத்தை அவரது தரப்பினர் முன்வைக்கவில்லை. இந்த நிலையில் அருட்தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.