இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும்
நிகழ்வும், இந்து சமய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான தேசிய மேன்மை விருது வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் விருது வழங்கும் நிகழ்வு, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்
தலைமையில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஸன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ் திருமுன்னிலை அதிதியாகக் கலந்து
கொண்டார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிதிகளால் நினைவுச் சின்னங்களும் பாராட்டுப்பத்திரங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
காரைதீவுப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், சம்மாந்துறைப்பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.அப்துல் லத்திப், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் ஸாபிர்
ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.