அலி ஸாஹிர் மௌலானா எம்.பியின் நிதியொதுக்கீட்டில்,மட்டக்களப்பில் அபிவிருத்திப் பணிகள்

0
99

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்டத்தில்
அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட நிதியினை
வழங்கியுள்ளார்.
இந் நிதி மூலமாக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கான ஒதுக்கீட்டு நிதி ஆவணம் கையளிக்கும் நிகழ்வு
ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஏ.சி.எம்.சயீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின்போது
தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டனர். பொருட்கொள்வனவு, கட்டட புனரமைப்பு மற்றும் நிர்மாணம் போன்ற துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
பாடசாலைகள், வணக்க வழிபாட்டுத்தலங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றம் சமூக சேவை நிறுவனங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.