அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் இருவர், இலங்கையில் உள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்காக 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
இதற்காக அவுஸ்திரேலிய அணி வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இந்தத் தொகையை வழங்கியுள்ளனர்.
இந்த தொகையை இலங்கையின் சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு யுனிசெப் மூலம் பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் 2 டெஸ்;ட், 5 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்கு இலங்கை ரசிகர்கள் நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.