திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த ‘லொகு பெடி’யின் அறிவுறுத்தலின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு கதிர்காமத்துக்குத் தப்பிச் சென்று தலைமறைவான நபர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைதானவர் அஹுவல்ல லோகன்வத்த பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி அஹுங்கல்லவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலேயே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், பனாகொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13,100 மில்லிகிராம் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.