ஆசியாவின் ராணி இன்னும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படவில்லை!

0
143

இலங்கையில் உள்ள ஆசியாவின் ராணி என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய “இயற்கை கொரண்டம் புளூ சஃபையர்” மாணிக்கக் கல் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய மாற்று முறைகள் இல்லாத காரணத்தினால் இன்னும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படவில்லை என அதன் உரிமையாளர் சமில சுரங்கா தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு இரத்தினபுரி – பலாங்கொட பகுதியில் உள்ள சுரங்கத்தில் இந்த மாணிக்கக் கல் கொத்து கண்டுபிடிக்கப்பட்டது.

310 கிலோ எடை கொண்ட அதன் கரட் அளவு தோராயமாக 15 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளதாக ரத்தினக்கல்லின் உரிமையாளர் தெரிவித்தார்.