ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள சுகவீன விடுமுறைப் போராட்டத்தால், மட்டக்களப்பு மாவட்டத்தில்கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு

0
128

ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள சுகவீன விடுமுறை போராட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி நிலை இன்றைய தினம் பாதிக்கப்பட்டிருந்ததுடன்
பெற்றோரும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார்கள்.
இன்றைய தினம் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவு வீழ்ச்சியுற்றிருந்ததைக் காணமுடிந்தது.

பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவான நிலையிலேயே இருந்ததுடன் பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குத்
திரும்பிச் சென்றனர். பாடசாலைக்கு பிள்ளைகளை கூட்டிவந்த பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன் மீண்டும் பிள்ளைகளை அழைத்துச்சென்றதையும் அவதானிக்க முடிந்தது. சில பாடசாலைகளில் இன்றைய தினம் சில ஆசிரியர்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.