ஆன்மீக ஆளுமை’ நூல் வெளியீடு

0
396

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் முன்னாள் வண்ணக்கர், தன்மன்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வும், அவர் பற்றிய ‘ஆன்மீக ஆளுமை’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வும் நேற்று நடைபெற்றது.
தன்மன்பிள்ளை நினைவுப் பணிமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவரும், ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளருமான பாஸ்கரன் தலைமையிலும் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சட்டத்தரணி சண்முகம் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
தன்மன்பிள்ளை அவர்கள் ஆலயத்திற்கும், சமூகத்திற்கும், சமயத்திற்கும் செய்த பணிகள் தொடர்பில் தொகுக்கப்பட்ட ‘ஆன்மீக ஆளுமை’ எனும் நூல் இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்டது. நூலின் முதற் பிரதியை களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் பாஸ்கரன் அவர்களிடமிருந்து மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சட்டத்தரணி சண்முகம் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில்,களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம்,ஸ்ரீ முருகன் ஆலயம், ஆகியவற்றின் வண்ணக்குமார், ஆலயங்களின் பரிபாலன சபை உறுப்பினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.