ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவு!

0
180

ஆப்கானிஸ்தானின் – பைசாபாத் நகருக்கு அருகாமையில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கே 196 கிலோ மீற்றர் தொலைவில் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.