28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆப்கானிஸ்தானில் 5.5 ரிச்டர் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று (19) காலை 5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தெற்கே-தென்மேற்கு திசையில் 632 கிலோமீற்றர் தொலைவில் பாகிஸ்தானையொட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

எனினும், பெரிதாக சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles