ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளராக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை அமைச்சர் பிமல் ரத்நாயக்கஇ சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன்போதே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.