Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
இங்கிலாந்தில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.சம்பவத்தில் கைது செய்யப்பட நபர் இங்கிலாந்தில் ஆசிரியர் உதவியாளர் மற்றும் உணவகத்தில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி இருவரிடம் தலா 40 இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து சந்தேக நபர் தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்தூறை பகுதியைச் சேர்ந்த என தெரிவிக்கப்படுகின்றது.