இசைநிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்நேற்று வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டநபர் ஒருவர் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அத்துடன் தாக்குதலில் காயமடைந்துள்ள மேலும் ஐவர் சிகிச்சைகளுக்காக தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.