போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்ற இரண்டு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாத்துப்பிடிவள மற்றும் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆணும் 25 வயதுடைய பெண்ணுமே நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கத்தாரின் டோஹா ஊடாக இத்தாலிக்கு செல்ல முற்பட்ட போது கத்தார் எயர்லைன்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களின் ஆவணங்கள் குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு குடிவரவு மற்றும் குடியகழ்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரனைகளின் போது இவர்களின் விசாக்கள் போலியானது என தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் தரகர் ஒருவரின் மூலம் 08 மில்லியன் ரூபாவினை செலவிட்டு போலி விசாவினைப் பெற்றுக்கொண்டதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது
பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.