அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிஇ அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி-20 தொடா்களில் விளையாடுகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி-20 தொடரை 2-1 என வென்றுள்ளது.
டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் அடித்தது.
அடுத்து ஆடிய இந்தியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களே எடுத்தது.
இந்த ஆட்டத்தில் 20 ஓவர்கள் வீச இந்திய அணி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் இந்திய அணிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 20 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.