இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வமாக நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை சம்பிரதாயத்துக்கமைய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டது.
‘ஐ.என்.எஸ். ஷல்கி’ (Shalki)என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் 64.4 மீற்றர் நீளம் கொண்டது. 40 கடற்படையினரை கொண்டுள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் இங்கிருக்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் இதன் செயற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
நீர்மூழ்கிக் கப்பல் நாட்டின் சில பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களை பார்வையிட உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் நாளை (04) இங்கிருந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.