இந்திய சமையல்காரி, கொக்கேனுடன் கைது!

0
8

இந்திய சமையல்கார பெண்ணொருவர் கொக்கேன் ​போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவிமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டார்.

ஆறு கோடியே 57 இலட்சத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கொக்கேன் அவரது பயணப்பொதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர் இந்தியாவின் மிசோரம் பகுதியைச் சேர்ந்த 29 வயது சமையல்காரர். அவர் இதற்கு முன்பு மூன்று முறை இந்த நாட்டிற்கு வருகை தந்திருப்பது கடவுச்சீட்டை சோதித்த போது தெரிய வந்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது, மேலும் அவர் கொண்டு வந்த சூட்கேஸின் போலி அடிப்பகுதியில், பாலிதீன் பொதிகளில் சுற்றப்பட்டு 1 கிலோகிராம் 644 கிராம் கொக்கெயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.