இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு உக்ரைன் செல்லவுள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. கடந்த மாதம் நரேந்திர மோடி ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட போது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் அது பரவலாக விமர்சிக்கப்பட்டிருந்தது.
ரஷ்ய மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் ஆரம்பித்துள்ள நிலையில் நரேந்திரமோடி உக்ரைன் செல்வது இது முதல்தடவை. இதன்போது இருநாடுகளுக்கிடையில் அமைதிப் பேச்சு வார்த்தை குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.