இந்தோனேசியா வர்த்தக ஒப்பந்தம் : அனுமதி வழங்கிய அமைச்சரவை

0
111

இந்தோனேசியா (Indonesia) மற்றும் இலங்கை (Sri Lanka) முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தில் (ISLPTA) கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா மற்றும் இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் (ISLPTA) தொடர்பான இரண்டாவது வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு கூட்டம் கடந்த (16.07.2024) அன்று கொழும்பில் நடைபெற்றது.

வர்த்தக உடன்படிக்கை

இதன்படி, உத்தேச இந்தோனேசியா மற்றும் இலங்கை முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை 2024 டிசம்பருக்குள் முடித்து 2025 மார்ச்சில் மேற்படி வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இதற்கு ஜனாதிபதி முன்வைத்த விடயங்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது