மத்துகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போபிட்டிய சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினர் அதன் உரிமையாளரையும் அங்கிருந்த மற்றும் ஒருவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
குறித்த தாக்குதலில் வர்த்தக நிலையத்துக்குள் இருந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த வர்த்தக நிலைய உரிமையாளர் வெட்டாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.