ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றுடன் (12) நிறைவடையவுள்ளன.
செப்டெம்பர் 4, 5, 6 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு நேற்றும் இன்றும் (12) வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்களிக்க முடியும்.
எவ்வாறாயினும், தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த எந்தவொரு அரசாங்க ஊழியர்களும் இன்றுடன் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.