ஈரான் இன்று அல்லது நாளை இஸ்ரேலின் தென்பகுதி மீது அல்லது வடபகுதி மீது நேரடி தாக்குதலை மேற்கொள்ளலாம் கருதும் இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்வதற்காக தயாராகிவருகின்றது என விடயம் குறித்து நன்கு அறிந்த நபர் ஒருவர் தெரிவித்தார்.என அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது
அமெரிக்க ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது
இதேவேளை ஈரானின் தலைமைத்துவத்திடமிருந்து தகவல்களை பெற்றஒருவர் ஈரான் தாக்குதல்களிற்கு திட்டமிடுகின்றது ஆனால் இன்னமும் இறுதிமுடிவு எதனையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.
கடந்தவாரம் சிரிய தலைநகரில் உள்ள துணை தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கு பதிலடி கொடுக்கவுள்ளதாக ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையணியின் தளபதிகள் உட்பட ஈரான் இராணுவத்தின் முக்கிய தளபதிகள் கொல்லப்ப்பட்டனர்.
முன்னதாக ஈரான் அல்லது அதன் சார்பு குழுக்கள் இஸ்ரேலின் தூதரகம் அல்லது அதற்கு சொந்தமான கட்டிடம் மீது தாக்குதலை மேற்கொள்வது உறுதி என்பதை வெளிப்படுத்தும் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன.
எனினும் தற்போது இந்த தாக்குதல் இஸ்ரேலின் எல்லைக்குள் இடம்பெறலாம் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.