இன்று பல அலுவலக ரயில் சேவைகள் இரத்து

0
66

இன்று செவ்வாய்க்கிழமை காலை திட்டமிடப்பட்ட பதினொரு (11) அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத காவலர்கள் கடமைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டையிலிருந்து மொரட்டுவை, பாணந்துறை, வாதுவை, நீர்கொழும்பு, அம்பேபுஸ்ஸ, பாதுக்கை, மற்றும் ராகம ஆகிய பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.