நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று
ஆரம்பமாகின்றது.
வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும். 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர், வேட்பு மனுத் தாக்கல் மற்றும் அனைத்து குழுக்களுக்கும் ஆட்சேபனை தெரிவிக்க ஒரு மணி நேரம் அனுமதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தலில் போட்டியிடுவதற்காக 86 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் நிலையில் புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21 ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.