‘மக்கள் மன்றில் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை பொதுநிலைப்பாடும் பொதுவாக்கெடுப்பும்’ என்ற பெயரில் தமிழ் அரசு கட்சியின் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் ஏற்பாடு செய்த ‘அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக்களம்’ நடந்து முடிந்திருக்கின்றது. அறிவோர் ஒன்றுகூடல் என்றால் மேலேயுள்ள தலைப்பு பற்றி அறிய விரும்புவோரா அல்லது அறிவுடையவர்கள் கருத்துக்களமா என்று புரியவில்லை.
அது எதற்காக கூட்டப்பட்டது என்பது வாசகர்களுக்கு தெரிந்ததுதான். அங்கு உரையாற்றிய சுமந்திரன் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராகதான் பிரசாரம் செய்து அவரை படுதோல்வி அடையச் செய்வேன் – இதன்மூலம் அந்த முயற்சியை தோற்கடிப்பேன் என்று வீரசபதம் செய்திருக்கிறார். அதை தோற்கடிக்காமல் விட்டால் அது தமிழ் மக்களின் உரிமை போராட்டத்துக்கு – சமஷ்டி கோரிக்கைக்கு எதிராக நடக்கின்ற சதிமுயற்சியை தடுக்காமல் விட்ட குற்றச்சாட்டுக்கு தானும் ஆளாகவேண்டும் என்றும் அங்கு உணர்ச்சி பொங்கக் கூறியிருக்கிறார்.
வழக்கமாக நிதானமாக தான் சொல்ல வந்த கருத்துகளை அமைதியாக மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற தனது பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது அவரின் அந்த உரை. அவர் அங்கு சொல்லிய கருத்துகளுக்கு அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நமது மூத்த அர சியல்வாதியும் சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா மிகச் சிறந்த பதிலை வழங்கி சுமந்திரனை மீண்டும் மேடைக்கு ஏறி பேச வைத்திருந்தார்.
அவர் சொன்ன விடயங்கள் அல்லது அங்கே முன்வைத்த கருத்துகள் பற்றி ஒவ்வொன்றாக பதில் எழுதுவது என்றால் இந்த வாரம் முழுவதும் இந்தப் பத்தியில் அதனையே எழுதிக்கொண்டிருக்கவேண்டும்.
சுமந்திரன் சொல்ல வந்தது முக்கியமாக சமஷ்டி கோரிக்கைதான் எமது அரசியல் கோரிக்கை என்பதை ஐம்பத்தியோராம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபித்துவரும் நிலையில் அதுபற்றி மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்தவேண்டிய தில்லை என்பதே அவரின் வாதமாக இருந்தது.
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு இருபத்தியிரண்டு எம். பிக்களுடன் இருந்த சமஷ்டி கோரிக்கைக்கு – ஆதரவான எம். பி.க்கள் தொகை இன்று எப்படி இருக்கின்றது என்பது அவருக்குத் தெரியாததல்ல. அதிகம் ஏன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியத்துக்கு ஆதரவான – அதாவது சமஷ்டி கோரிக் கைக்கு ஆதரவான கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் வடக்கு – கிழக்கு முழுவதும் நான்கு இலட்சத்து நாற்பதாயிரம் மட்டுமே. ஆனால்இ அதற்கு எதிரானவர்கள் பெற்ற வாக்குகள் ஐந்து இலட்சத்து எண்பதாயிரத்துக்கும் அதிகமானது.
இப்படி ஒவ்வொரு விடயமாக பேசுவது தேவையற்றது என்பதால் அதனை விட்டுவிடுவோம். ஆனால் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் அதற்கு எதிராக தான் பிரசாரம் செய்வேன் என்று அவர் அழுத்தம் திருத்தமாக அங்கு அறிவித்திருக்கிறார். எமது கேள்வி எல்லாம்இ கடந்த மே மாதம் பத்தொன்பதாம் திகதி வவுனியாவில் நடை பெற்ற தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றி அவர் அறிந்து வைத்திருக்கவில்லையா என்பதுதான். ‘தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அவசரமாக முடிவு எடுப்பதில்லை.
ஜனாதிபதித் தேரதல் அறிவிக்கப்பட்ட பின்னரே இது தொடர்பான இறுதி முடிவை எடுப்பது என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளது.’ இதுவே அந்தக் கூட்டம் பற்றி மறுநாள் ஈழநாடு வெளியிட்ட தலைப்பு செய்தி.
பொதுவேட்பாளர் விடயத்தில் கட்சி இன்னமும் ஒரு முடிவை எடுக்காத நிலையில் கட்சியின் தலைவரும் முன்னால் அமர்ந்திருக்க – இவரோஇ அதற்கு எதிராக தான் பிரசாரம் செய்வேன் என்றும் அதனை தோற்கடிக்க தன்னாலான வரை உழைப்பேன் என்றும் கர்ஜித்திருக்கிறார். யுத்தம் முடிவடைந்து இந்த பதினைந்து ஆண்டுகளில் – அல்லது அவர் தமிழ் அரசு கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட இந்த பதினைந்து ஆண்டுகளில் அவரும் சம்பந்தனும் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளே இன்று தமிழ் மக்களை தமிழ்த் தேசிய அரசியலை விட்டு தூரவிலக்கி வைத்திருக்கின்றன.
அதிகம் ஏன்?இ தமிழீழ விடுதலை போராட்டத்துக்கு மிக உச்ச பங்களிப்பை செய்த அவரின் உடுப்பிட்டித் தொகுதியிலேயே அவரால் வெற்றிபெற முடியவில்லை என்பது மட்டுமன்றிஇ அது இன்று ஒரு தெற்கு தேசியக் கட்சி ஒன்றிடம் இருக்கின்றது. இன்று ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் தேசிய ஆதரவு உறுப்பி னர்களின் தொகை குறைந்து கொண்டே வருவதற்குஇ சம்பந்த னும்- சுமந்திரனும் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளே காரணம்.
இதனை அண்மையில் சிங்கள புத்திஜீவிகளில் ஒருவரும் அரசியல் ஆய்வாளருமான குஷால் பெரேரா தனது கட்டுரை ஒன்றிலும் எழுதியிருந்ததும் கவனிக்கத்தக்கது. இத்தனை தோல்விகளுக்கு பின்னரும் தமிழ் அரசு கட்சியை தன்னிச்சையாக வழிநடத்திச் செல்ல முனைவது எதற்காக என்பதை இன்னும்தான் புரிந்து கொள்ளமுடியவில்லை.
கட்சி பொதுவேட்பாளர் விட யத்தில் ஒரு முடிவை எடுத்து அது தேவையற்றது என்று கருதினால் அதற்காக பிரசாரம் செய்வதில் தவறிருக்காது. ஆனால் கட்சி இன்னமும் அதுவிடயத்தில் முடி வெடுக்காத நிலையில் அதனை எதிர்த்து பிரசாரம் செய்வேன் என்று கட்சித் தலைவரையும் வைத்துக்கொண்டு ஒருவர் அறிவிக்கிறார் என்றால்இ கட்சி எத்த கைய கட்டுக்கோப்பாக இருக்கின்றது என்பதற்கு விளக்கம் தேவையிருக்காது.
ஊர்க்குருவி.