32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

ஒருமுறை அறிஞர் ஒருவர் ‘இயற்கையின் படைப்புகள் அனைத்தும் ஒன்றே’ என்ற மெய்மை விளக்கம் தந்து கொண் டிருந்தார். இதனைக் கேட்டுக் கொண் டிருந்த ஒரு படித்த மேதை ‘பகுத் தறிவு கொண்ட ஒரு மனிதன் முதலைகளையும் புலிகளையும் அடக்கியாள முடியுமா? நாமெல் லாம் ஒன்று என்பதால் ஒருவன் புலியின்மீது சவாரி செய்யுமுடி யுமா?’ என்று கேட்டான். இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் பலமாக சிரித்தார்.
‘புலியின் முதுகின் மேலேறிச் செல்வது, இரண்டு உடல்களுக் கிடையே வேறுபாடு உண்டு என்பதைக் காட்டுகிறது. ஆனால், ஒரு மனிதன் புலியால் விழுங்கப்பட்டுவிட்டால் அவர் கள் இருவரும் ஒன்றே’ என்றார். தமிழ் அரசுக் கட்சிக்கு எதி ரான வழக்கு விசாரணை நாளை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் நடைபெறவிருக்கின்றது.
நாளைய விசாரணையின் போது வழக்கை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து, கடந்த பதினான்காம் திகதி தமிழ் அரசு கட்சியின் உயர்பீடம் கூடி ஆராய்ந்தபோதிலும் எதுவித முடிவும் எடுக்கப்படாமலே முடிவடைந்திருந்தது. வழக்கில் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள அனை வரும் ஒரே நிலைப்பாட்டில் தத்தமது முடிவுகளை கொடுப் பது பற்றி ஆராய்வதற்காக அந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
கூட்டத்தில் அனைவரும் எவ்வாறு நீதிமன்றுக்கு அறிக்கையிடுவது என்பது தொடர்பாக எட்டு எதிராளிகள் சார்பிலும் ஓர் அறிக்கையை தயாரித்து அந்தக் கூட்டத்தில் சுமந்திரன் எம். பி. சமர்ப்பித்திருந்தபோதிலும் அதனை ஏற்றுக்கொள்ள சிறீதரன் எம். பி. மறுத்துவிட்டாரெனத் தெரியவந்தது. சுமந்திரன் தயாரித்து அந்தக் கூட்டத்தில் சமர்ப்பித்த அந்த ஆவணத்தில், தமிழ் அரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் பொதுச் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை நூற்றி ஐம்பத்து ஆறு என்பதை ஏற்றுக்கொள்வதாக எழுதப்பட்டிருந்ததை ஏற்றுக் கொள்ள சிறீதரன் தரப்பு மறுத்து விட்டதாலேயே அந்தக் கூட் டத்தில் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை என்று தமிழ் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் அரசின் யாப்பின்படி வடக்கு, கிழக்கில் உள்ள இருபத்தி மூன்று தொகுதிக் கிளைகளுக்குமான உறுப்பினர் களே பொதுச்சபைக்கு உறுப்பி னர்களாக தெரிவுசெய்யப்பட வேண்டும்.
உதாரணமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 11 தொகு திகள் உண்டு. அவ்வாறு 11 தொகுதிகள் இருந்தபோது 11 எம். பிக்களும் இருந்தார்கள். ஒவ்வொரு தொகுதிக் கிளைக்கும் அந்தந்தத் தொகுதி எம். பிக்களே தலைவர்களாகவும் இருந்தார்கள். தொகுதிக் கிளைகளிலிருந்து உறுப்பினர்கள் பொதுச்சபைக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். ஆனால், இப்போது யாழ்ப்பா ணம் தேர்தல் மாவட்டத்தில் 11 தொகுதிகள் இருந்தாலும் ஏழு எம். பிக்களே மாவட்டத்தில் இருக்கின்றனர்.
அதனாலேயே பிரதேச சபைகள்தோறும் இயங் கும் கிளைகள் ஒவ்வொன்றையும் தொகுதிக் கிளைகளாகக் கொள்வதென்றும் வடக்கு – கிழக்கில் உள்ள ஐம்பத்தி ஏழு பிரதேச சபைகளையும் பிரதிநிதித்துவப் படுத்தும் பிரதேச கிளைகளையே தொகுதிக் கிளைகளாகக் கொள்வது எனவும் இதன்படி பொதுச் சபைக்கு முந்நூற்று இருபத்தியாறு உறுப்பினர்கள் தெரிவாவர் என்றும் ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி வவுனியாவில் நடைபெற்ற மத்திய செயல்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதனைச் சுட்டிக்காட் டிய சிறீதரன் ஏற்கனவே, செயல்குழு எடுத்த தீர்மானத்தின் படியே உறுப்பினர்கள் எண் ணிக்கை அமையவேண்டும் என்று வலியுறுத்தினார் எனத் தெரியவருகின்றது.
பிரதேச கிளைகளை தொகு திக் கிளைகளாக கொள்வது என்று கட்சி முடிவு எடுக்காமலே பொதுச்சபைக்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு கட்சி இயங்கி வந்திருக்கின்றது. அதனை அதுவரை சுட்டிக்காட் டாதவர்கள், இப்போது யாப்பை தூக்கிப்பிடித்துக்கொண்டு வருவது சட்டப்படி சரியானது தான்.
ஆனால், அதனை ஏற்றுக்கொண்டு, பொதுச்சபை யையும் கூட்டி தெரிவுகளை செய்ய இந்த வழக்கை தாக்கல்செய்த கட்சிக்காரர்க ளும்தான் சம்மத்தித்திருந்தனர். அதிகம் ஏன், ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியாக நாட்டில் அரசியலமைப்பு சட்டம் மீறப் படுகின்றபோது, இலங்கையின் தேசிய பிரஜையாக பொங்கி எழுந்து உயர்நீதிமன்றில் இலங்கை அரசியலமைப்பை பாதுகாக்கப் போராடுகின்ற போராளியான சுமந்திரன், யாப்பு மீறப்பட்ட நிலையில் தெரிவான உறுப்பினர்களுடனேயே பொதுச்சபையைக் கூட்டி தலை வர் தெரிவை நடத்தியிருந்தார். தானும் அந்தப் பொதுச்சபைக் கூட்டத்திலேயே தேர்தலை சந்தித்து தலைவர் பதவிக்கான தேர்தலை எதிர்கொண்டார்.
அந்தக் கூட்டத்தில் நடந்த தலைவர் பதவிக்கான தேர்தலில் சுமந்திரன் வெற்றி பெற்றிருந்தால் இன்று எந்தப் பிரச்னையும் இன்றி கட்சி நடைபோட்டிருக்கும். கட்சியின் தலைவிதியோ தெரிய வில்லை, அவர் தோற்க, கட்சி இன்று நீதிமன்ற படிகளை ஏறி இறங்கவேண்டிவந்திருக்கின்றது. – ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles