இரட்சனிய சேனையின், மட்டக்களப்பு சபையினரது வருடாந்த ஒளி விழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

0
130

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வரும் மட்டக்களப்பு
இரட்சனிய சேனை சபையின் ஒளி விழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இரட்சனிய சேனை படையினரின் ஏற்பாட்டில் பெற்றார்களின் பங்களிப்புடன் பாடசாலை சிறார்களை மகிழ்ச்சி படுத்தும்
வகையில் வருட இறுதி நிகழ்வாக ஒளிவிழா நிகழ்வு மேஜர் புவனேந்திரன் தலைமையில் ஒழுங்குபடுத்தப்பட்டது.
சிறார்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் அவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.
விசேட விதமாக ஒளிவிழா நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் வாழைச்சேனை இரட்சனிய சேனையில் பணியாற்று கின்ற லெப்டினன் சிவகுமார்,
லெப்டினன் ராகினி சிவகுமார் ஆகியோர் கெப்டன் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டனர்.
இரட்சனிய சேனையின் படையினர் ,ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்