இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

0
90

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தலைமையில்; இரத்த தானம் நடைபெற்றது.

மட்டக்களப்பு வாவிக்கரை பிரதேசத்தில் நிழல் தரும் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன்
இரத்ததான முகாம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியர் எஸ். விருஷ், வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு தாதிய உத்தியோகத்தர்களும் இரத்ததான முகாமை நெறிப்படுத்தினர்.