இராஜினாமா செய்வதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது – பிரதமர்

0
188
தாம் இராஜினாமா செய்யவுள்ளதாக வௌியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இவை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்கான சதித்திட்டம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், தமது உறுப்பினர்களிடம் ஆதரவைக் கோரியுள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் எதிர்வரும் 3ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.