இந்தியா, இராமநாதபுரம் – பாம்பன் கடற்கரையில் 2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அதன் உடலை மீட்ட வனத்துறையினர், உடற்கூற்று ஆய்விற்குப் பின்னர் பாம்பன் கடற்கரையில் புதைத்தனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கான கடல் பசு, திமிங்கலம், சுறா, டால்பின், கடல் குதிரை, கடல் பல்லி, உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.
இந்த நிலையில் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே கடற்கரையில் இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் கடற்கரைக்கு சென்று மீட்டு, உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் புதை;தனர்.
இறந்த திமிங்கலம் நீல திமிங்கல வகையை சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இறந்த நிலையில் கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலத்தை பார்ப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர்.