இரும்புக் கம்பியால் தாக்கி குடும்பஸ்தர் கொலை!

0
128

இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பதுளை எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுக்கொடை தோட்டத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இருக்கொட தோட்டம், உடு கும்பல்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது குடும்பஸ்தரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரும் தாக்குதலில் காயமடைந்துள்ள நிலையில் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.